உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

சுனாமியின் வடுக்கள்

சுனாமியின் வடுக்கள்

“ சுனாமியின் வடுக்கள் “ கவி....ரஜனி அன்ரன் (B.A) 26.12.2024 ஆழ்கடலின் அடியில் பூகம்பம் அவனியே நடுக்கம் ஆழிப்பேரலையாய் ஊழித் தாண்டவம் அரக்கனாய் வீடுவரை சென்று இரக்கமின்றியே உடலங்களை இழுத்துச் சென்று ஆத்மாக்களை ஆழியில் கரைத்து தீராப்பசி தீர்த்து ஏப்பம் விட்ட துயரநாள் மார்கழித் திங்கள் இருபத்தியாறு ! அழித்துச் சென்ற தடங்கள் அள்ளிச் சென்ற உடலங்கள் எத்தனை எத்தனை அத்தனையும் ஆறாத் துயரங்கள் வளம் சிறக்க வழிகோலி இனம் சிறக்க படகேற்றி தினம் தினம் மடியிலே சுமந்த கடலம்மா சினம் கொண்டு அள்ளிச் சென்றாயோ மார்கழித் திங்கள் இருபத்தியாறினிலே ! இறந்த உயிர்களுக்கு இரங்கலைத் தவிர வேறெதுவுமில்லை இதுபோல அனர்த்தங்கள் இனிமேலும் வேண்டாமே இருபது வருடங்கள் கடந்த போதும் இன்றும் வழிகிறதே எம் விழியோரம் புதிய கனவுகள் பூக்கட்டும் புத்துணர்வும் பிறக்கட்டும் ! https://www.youtube.com/watch?v=w7JIC8lyaB0