உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

" சுதந்திரம் "

" சுதந்திரம் "

ரஜனி அன்ரன் (B.A) " சுதந்திரம் " 05.02.2026 சுதந்திரம் என்பது அடிப்படை உரிமை அதுவே ஒவ்வொரு மனிதனதும் பிறப்புரிமை சுதந்திரமென்பது வெறும் உரிமையல்ல அதுஒவ்வொரு தனிமனிதனின் பொறுப்புரிமை தடையின்றி வாழும் முழுமையான உரிமையே உண்மையான சுதந்திரம் ! தலை நிமிர்ந்து நடந்து தவறுகளைத் தட்டிக் கேட்டு தனிமனித எண்ணம் சிந்தனை செயற்பாடுகளோடு பிறரின் உரிமையையும் மதித்து ஒளியாய் வாழ்தலே சுதந்திரம் ! தேசம் பெற்ற சுதந்திரம் நேசமான வரலாற்றின் பக்கமென்றால் மனம்பெறும் சுதந்திரம் மகத்துவமானதே சுதந்திரம் என்பது காற்றைப் போன்றதே நாம்அனுபவிக்கும் இந்த சுதந்திரம் பலரின் இரத்தத்தாலும் வியர்வையாலும் கிடைத்ததுவே அதனைப்போற்றிப் பாதுகாப்போம் ! https://www.youtube.com/watch?v=NB18AGRw3vM