உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

சி.பேரின்பநாதன்

சி.பேரின்பநாதன்

வியாழன் கவிதை 10-03-2022 ஆக்கம் – 35 உன்னதமே உன்னதமாய் விசித்திரமான உலகத்தில் விந்தைமிகு மனிதர்கள் சிந்தனை தெளிவு பெற்று உலகிற்கு நல்வழி காட்டியதால் உன்னத மனிதராய் போற்றப்படுகின்றார்கள் உலகம் உருண்டை என்று சொன்னவன் உதைக்கப்பட்டான் உலகின் நலனுக்கா உழைத்தவர்கள் பட்ட துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல முயற்ச்சிகள் யாவும் நிதர்சனமாகும் வரை ஆக்கதிற்க்கு ஊக்கம் தந்த அணு - இன்று உலக அழிவிற்க்கு துணைபோகின்றது சன்னதம் கொண்டு சதிராடுகின்றது பயித்தியக்கார உலகம் இயற்கையின் வழியில் சிந்தனை மாற்றமும் புதியதோர் உலகமும் பிறந்திடல் வேண்டும் மனித இனம் மனித தினம் கொண்டாடும் நிலை வரவேண்டும் உன்னதமானவர்கள் போற்றிப் புகழப்படவேண்டும் கவிதை ஆக்கம் அல்வாய் பேரின்பநாதன் லண்டன் 09-03-2022