உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

சி.பேரின்பநாதன்

சி.பேரின்பநாதன்

சந்தம் சிந்தும் கவிதை வாரம்:221 09/05/202 காணி சொத்தாக ஓருதுண்டக் காணியும் குடி இருப்தற்கு ஓர் குடிசையும் வாழ்வில் கிடைப்பது வரமாகும் நடுவினிலே வீடிருக்கும் நாற்புறமும் வேலியிலே பூவரசம் பூ பூத்திருக்கும் முப்புறமும் முக்கனி மரங்களும் நிறைந்திருக்கும் முற்றத்து மல்லிகையும் மணம் பரப்பும் முன்காணிப் பனைமரமும் நினைவில் வரும் நாம் வாழ்ந்த வாழ்க்கையின் பொற்காலம் தலைகீழ் மாற்றத்தில் யாழ்ப்பாணம் சந்தனம் தடவிய வெளிநாட்டுக்காசு கொட்டுவதால் கட்டுகின்றார்கள் வெளவால்கள் வாழ்வதற்க்கு மாட மாளிகைகள் முற்றத்து நிலம்முழுவதும் வண்ணக் கற்கள் பதிப்பதால் நிலத்தடி நீருக்கு வரப்போகும் பெரும்கேடு குடிப்பதற்க்கு குடிநீரின்றி குடாநாடு தவிக்கும் காலம் வரும் விடுவிக்கபடாத காணிக்கு வீதியில் மக்கள் போராட்டம் புலம்பெயர் உறவுகளின் காணிகளை காணிக்கை கேட்போர் ஓருபுறம் ஓரு பரப்புக் காணிவாங்க மக்கள் திண்டாட்டம் கோடிகளில் விலையை உயர்த்தும் புலம்பெயர் தேசத்து புண்ணியவான்கள் மறுபுறம் பாவத்தை சொத்தாக சேர்காதீர் பிள்ளைகளுக்கு ஏழு தலைமுறைக்கும் தீராது பாவம் ஓருகுழி நிலமின்றி வாழும் நிலையில் மக்கள் ஊர்கள் தோறும் வான்உயர்ந்த கோபுரங்கள் கோவில் எங்கும் திருவிழாக் கொண்டாட்டங்கள் பத்துக் குட்டு மேளச்சத்தம் விண்ணைப்பிளக்கும் பசித்த வாய்க்கு பாலின்றி குழந்தை தவிக்கும் ஆண்டவன் காதிற்கும் அழுகுரல் கேட்காது ஆர்பரிக்கும் அரோகரா கோசத்தில் கவிதை ஆக்கம் அல்வாய் பேரின்பநாதன் லண்டன் 05-05-2022