உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

சி.பேரின்பநாதன்

சி.பேரின்பநாதன்

சந்தம் சிந்தும் கவிதை- 215 விடியல் எங்கள் ஈழதேசம் அழகின் அழகு விடிகாலைப் பொழுது அழகோ அழகோ கடற்கரையோரம் கண்விழிக்கும் நேரம் கதிரவன் கதிர்கள் கண்னிற்கு விருந்து உடல் நலம் காக்கும் அருமருந்து உலகிற்கு இயற்கை தந்த வரமாகும் கோயில் மணியோசை காதோரம் வண்டுகள் இசைத்திடும் ரீங்காரம் பூக்களும் மலர்ந்து புன்னகை செய்யும் புல்வெளி எங்கும் பனித்துளி மின்னும் வயல்வெளி எங்கும் நெற்கதிர்கள் தலைசாய்க்கும் மனமெங்கும் ஏகாந்தம் நிறைந்திருக்கும் தினம் தினம் புதுவிடியல் ஆயிரம் ஆயிரம் அற்புதங்கள் ஆழ்மனதில் தீராத ஏக்கங்கள் விடியவில்லையே எங்கள் தேசம் விடிந்தும் விடியாத பொழுதுகளாய் நாட்கள் நகர்கின்றன நாளை விடியுமென்ற நம்பிக்கையில் கவிதை ஆக்கம் அல்வாய் பேரின்பநாதன் லண்டன்