உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

சி.பேரின்பநாதன்

சி.பேரின்பநாதன்

சந்தம் சிந்தும் கவிதை- 178 பாமுகம் வானொலியாய் வான்பரப்பில் வலம் வந்து பாமுகமாய் மலர்ந்து ஓளி வீசுகின்றது பலமுகங்கள் அறிமுகத்தால் ஆற்றல் பெறுகின்றது பன்முகத் திறமைகள் வெளிவருகின்றது கடந்து வந்த பாதையோ மிகக் கடினமானது வார்த்தைக்குள் அடங்காத வலிகள் நிறைந்தது வைராக்கியமே இன்று வரை வழிநடத்துகின்றது உற்ற துணையும் உறுதுணையாக நிற்கின்றது ஆண்டுகள் இருபத்தைந்து நிறைவானது தனித்துவத்தால் தலைநிமிர்ந்து நிற்கின்றது எதிர்காலச் சந்ததிக்கு நல்வழி காட்டுகின்றது இலட்சியப் பயணம் நன்றே தொடர்கின்றது கவிதை ஆக்கம் அல்வாய் பேரின்பநாதன் லண்டன் 12-06-2022