உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

சி.பேரின்பநாதன்

சி.பேரின்பநாதன்

சந்தம் சிந்தும் கவிதை- 177 பழமை தொன்று தொட்டு தொடர்கின்றது தொன்மையான பழமை வழிவழி வந்த நம்முன்னோர்கள் வழிகாட்டிய வாழ்க்கையின் மகத்துவம் உணவே மருந்தானது பழமையின் வாழ்வியலில் பழஞ்சோற்றில் மறைந்திருக்கும் மருத்துவத்தின் அற்புதம் புதுமையான புரியாணியில் என்றும் கிடைப்பதில்லை மின்மினிப் பூச்சிகளாய் மின்னிடும் புதுமைகள் விட்டில் பூச்சிகளாய் வீழ்ந்து மடியும் உலக அதிசயங்களாய் உயர்ந்து நிற்கின்றன பழமையான வரலாற்றுச் சின்னங்கள் சுவர்களிலும் குன்றின் குகைகளிலும் வரைந்து வைத்தார்கள் வண்ண வண்ண ஓவியங்களை விஞ்ஞானம் விடை காணமுடியாத மெஞ்ஞானக்கலவை கொண்டு பழமை மாறாத பண்பாட்டு விழுமியங்கள் பரம்பரை பரம்பரையாக தொடர்ந்து வரும் காலத்தால் அழிக்கமுடியாத காட்சிப்படிமங்களவை சுட்டாலும் சங்கு வெண்மையாகும் காலங்கள் கடந்தாலும் பழமை பொன்னாகும் பழமையை போற்றிக் கொண்டாடுவோம் கவிதை ஆக்கம் அல்வாய் பேரின்பநாதன் லண்டன் 03-06-2022