உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

சி.பேரின்பநாதன்

சி.பேரின்பநாதன்

சந்தம் சிந்தும் கவிதை- 171 எதிர்ப்பு அலை மாண்டதனால் வீழ்ந்து கிடக்கின்றது இலங்கை மீண்டு எழுந்திட கை கொடுக்க யாருமின்றி கொத்துக் கொத்தாய் எம் இனமக்களை கொத்துக் குண்டுகளால் கொன்று குவித்த பாவத்தின் சாபத்தால் விதைத்த வினையின் அறுவடைக்காலம் அன்று அறுத்த அரசனுக்கு இன்று அறுக்கின்றான் இறைவன் எதிர்ப்பு அலைக்குள் ஆட்டம் காணும் அசுர ஆட்சிக்கப்பல் கவிழும் நிலையில் எரிவாயு இன்றி வயிறு பற்றி எரிகின்ற போது தெரிகின்றது வாய்க்கரிசியின்றி முள்ளி வாய்காலில் எம் இனமக்கள் பட்ட துன்ப துயரம் பத்தும் பறந்து போனதனால் சித்தம் தெளிந்து போனார்கள் சங்கு ஊதும் சகுனி நாடுகள் சுயநல அரசியலை நிறைவேற்ற மதில் மேல் பூனையாய் பதுங்குகின்றன மக்களின் எழுச்சி வீறுகொண்டு செல்கின்றது இராவணன் ஆண்ட பூமிக்கு சாப விமோசனம் கிடைக்குமா கவிதை ஆக்கம் அல்வாய் பேரின்பநாதன் லண்டன் 14-04-2022