உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

சி.பேரின்பநாதன்

சி.பேரின்பநாதன்

சந்தம் சிந்தும் கவிதை- 167 பணி நற்பண்புகள் ஊட்டி நல்வழி காட்டி பிள்ளைகளை வளர்ப்பது பெற்றோர்கள் பணி நன்நெறிப் பாடமும் மெய்நெறி வழியும் மாணவனிற்கு எடுத்துரைப்பது ஆசிரியர் பணி கூடி மகிழ்ந்து ஓன்றாய் வாழ்வதும் அன்பு கொண்டு அரவணைப்பதும் உறவுகள் பணி உலகம் முழுவதும் உண்மைச் செய்தியை உரக்கச் சொல்வது பத்திரிகைப் பணி இயற்கையை அழிவிலிருந்து பாதுகாத்து சுயநலமின்றி வாழ்வது மக்கள் பணி மக்கள் சேவையே மகேசன் சேவையென நீதி தவறாது நல்லாட்சி செய்வது அரசின் பணி இடர் பிணி வரம்போது உதவிகள் செய்வது நற்பணி வாழும் காலத்தில் வாழ்வாங்கு வாழ்ந்தவர்கள் இதய சுத்தியுடன் இறைவனுக்கு செய்வது இறைபணி கவிதை ஆக்கம் அல்வாய் பேரின்பநாதன் லண்டன் 18-03-2022