உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

சி.பேரின்பநாதன்

சி.பேரின்பநாதன்

சந்தம் சிந்தும் கவிதை-159 பரவசம் பிரபஞ்சம் எங்கும் பரந்து கிடக்கின்றது எண்ணில் அடங்கா பர வசம் பார்க்கும் இடம் எங்கும் நோக்க நோக்க இயற்கையின் பர வசம் பல்லுயிகளுக்கெல்லாம் பர வசம் மலை முகடுகளுக்கு ஆகாயம் பர வசம் மண்ணின் முத்தம் மழையின் பர வசம் வீசும் தென்றல் தென்னைக்கு பர வசம் கரைவந்து மோதும் அலையின் பர வசம் கூவும் சேவலிற்கு விடியல் பர வசம் தோகை விரித்தாடும் மயிலின் பர வசம் படமெடுத்தாடும் பாம்பின் பர வசம் மூங்கிலின் நாதம் வண்டுகளின் பர வசம் எமக்குள்ளும் எண்ணற்ற பர வசம் அவரவர் மனங்களின் நெகிழ்ச்சியில் பெண்மைக்கு தாய்மை பர வசம் தாயின் அணைப்பில் சேய்யின் பர வசம் தந்தையின் தோழில் பிள்ளையின் பர வசம் பக்தனின் பக்தி முத்தினால் பர வசம் மாணவன் சித்தி எய்தினால் பர வசம் பெரும் பொருள் கிடைத்தால் பர வசம் பரம் பொருள் அடைந்தால் பர வசம் அதுவே வாழ்வில் ஆனந்தப் பர வசம் ஆக்கம் அல்வாய் பேரின்பநாதன் லண்டன்