உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

சிவா சிவதர்சன்

சிவா சிவதர்சன்

வாரம் 236 "குழலோசை" மூங்கில் எமக்களித்த புல்லாங் குழலோசை ஏங்கித்தவிக்க வைக்கும் பரவசஓசை வேய்ங்குழலோசை மீண்டும்கேட்க மனதிலாசை மயங்காதவரையும் மயக்கும் இனிய குழலோசை ஆயர்பாடி கேட்டு மகிழ்ந்த அதிசய குழலோசை ஆநிரைகள் மெய்மறந்து அதிக பால் சுரந்த அற்புத ஓசை எம்காதில்பாய்ந்து கடமைகளை ஒழுங்கமைக்கும் குழலோசை ஆலை,தொழிற்சாலை கூவி அழைக்கும் குழலோசை ஆனந்தமாய் ஆரம்பித்து மரணபயமூட்டும் குழலோசை பீரங்கி துப்பாக்கி வெடியோசை தந்திடுமே அவல ஓசை ஆண்டவனை வேண்டி உயிர்பிழைக்கும் ஓர் நப்பாசை காற்றில்லா நிலையில் நிலையில்லா குழலோசை! நன்றி வணக்கம் சிவா சிவதர்சன்