உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

சிவா சிவதர்சன்

சிவா சிவதர்சன்

[ வாரம் 222. ] "பெற்றோரே" பெற்றோரே! பெற்றோரே! பெருமை வாய்ந்த பெற்றோரே! பெற்றதை சிறப்பாய் சீராக வளர்ப்பீரே! அதிகாரமின்றி அடக்குமுறையின்றி பிள்ளையை நேயமுடன் வளர்ப்பீரே ! மனதில் தோன்றும் எண்ணங்களை சுதந்திரமாய் வெளியிடும் உரிமையை கொடுப்பீரே ! ஐந்தறிவுப்பூனையும் ஒடுக்குமுறைக்குச் சீறிப்பாயும்என்பதை அறியீரோ ? அடக்குமுறை, எதிர்ப்பலைகள் பாசத்தை வேரறுக்கும் விதிவலைகள் காலத்துக்கு ஏற்றவாறு நீங்களும் மாறித்தான் ஆகவேண்டும் பெற்றோரே ! அன்னையர்தினம் தந்தையர்தினம் சித்திராப்பௌர்ணமி ஆடி அமாவாசையில் கொண்டாடும் எம்மவரே பெற்றவர்தினம் கொண்டாட ஏன் மறந்தீர் பெற்றோரே ! அன்னையும் பிதாவும் முன்னறிதெய்வம் என உரைத்த ஔவைப்பாட்டியும் பெற்றவரில் இருவரும் அடக்கம் என்பதால் சொல்லாமல் விட்டாரோ ? கண்ணெதிரே உலாவிய தெய்வங்கள், விரும்பிய தெல்லாம் தந்த இறைவிம்பங்கள் நீங்களன்றோ பெற்றோரே ! தங்கள் பிள்ளைக்காய் தங்கள் வசதிகளைத்துறந்து தியாகவாழ்வு வாழ்ந்தவர் நீங்களன்றோ பெற்றோரே ! தங்கள் வசதிகள் குன்றாது முதியோர் இல்லம் அனாதை ஆச்சிரமம் என அலையவிட்டார் உம்மை பெற்றோரே ! எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பொய்யாமொழிப்புலவர் கூறிச்சென்றாரே! கவலை வேண்டாம் பெற்றோரே அவர்களும் ஒருநாள் உங்களிடத்தில் வருவாரே! இந்தச்சாபமே மனதைவருத்துகிறதா பெற்றோரே ! நன்றி வணக்கம் சிவா சிவதர்சன்.