உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

சிவா சிவதர்சன்

சிவா சிவதர்சன்

[ வாரம் 286 ] "மாற்றம்" மாற்றம் உலகில் மாற்றமுடியாதொரு நியதி உயிர்களின் வரலாற்றில் பரிணாமவளர்ச்சி ஒருவிதி மனிதனின் தோற்றமோ யாரும் அறியாத காலம் மாற்றங்களின் தொகையும் கூறமுடியாது யாரும் நிர்வாணமாய் அலைந்து திரிந்த ஆதிமனிதன் இன்று விதம்விதமாய் ஆடை அணிவதில் பிரியன் அன்று பச்சையாய் உண்டு வயிற்றை நிரப்பியவன் இன்றோ அறுசுவையுணவு சமைத்து உண்பவன் குகைகளில் விலங்காய் அன்று வாழ்ந்தவன் வசதிகொண்டமாளிகை இன்று அமைப்பவன் பிறரோடு பேசிப்பழகத்தெரியாதவன் இன்று தொலைதூரம் தொடர்புகொள்ள வல்லவன் ஆட்சி அதிகாரம் பணம் பதவி வரும்போது மனிதன்மாறவில்லை எண்ணத்தால் உயரவில்லை முடியாட்சி முடிந்து குடியாட்சி இடம்பெற்றபோதும் ஆட்சியமைக்க தேர்தல்கள் நடக்கும்போதும் மனிதன் மாறவில்லை போட்டி பூசல் குறையவில்லை புறத்திலவன் உயர்ந்தாலும் அகத்தில் என்றும் உயரந்ததில்லை வளர்ந்த நாடுகள் என்பார்கள் அங்கும் ஒற்றுமையில்லை அதிகார துஷ்பிரயோகம் ஊழல் லஞ்சம் தலைவிரித்தாடும் காட்டுமிராண்டித்தனம் ஆட்சியை உலுக்கும் ஆட்சிமாற்றம் வேண்டுமென்றே கோஷம் வலுக்கும் மொத்தத்தில் மனிதன் மாறவில்லை மனதால் அவன் என்னும் உயரவில்லை. நன்றி வணக்கம் சிவா சிவதர்சன்.