உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

சிவாஜினி சிறிதரன்

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி வாரம் 134 பொங்கலோ பொங்கல் உழவர் திருநாள் உன்னத பெருநாள் ஊர் கூடி உறவு கூடி மகிழ்ந்திடும் பொங்கல் சாணத்தால் மெழுகி முற்றத்தில் கோலமிட்டு விளக்கேற்றி கும்பிடுவாள் அன்னை பால் எடுத்து பொங்கலுக்கு பானை வைப்பார் அப்பா பொங்கல் பானை பொங்கி ஊத்துவது போல் மனங்களில் மகிழ்ச்சி பொங்கிட பொங்கி படைத்திடுவோம் உழைக்கும் மக்கள் இயற்கையை தெய்வமாக கருதப்படும் சூரியனுக்கும் கால்நடைகளுக்கும் நன்றி பகரும் உன்னத நாள் கால்நடைகளுக்கு குளிப்பாட்டி பொட்டு வைத்து மாலை அணிவித்து பொங்கிடும் பொங்கல் பட்டிப் பொங்கல் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் திருநாள் !! நன்றி வணக்கம் சிவாஜினி சிறிதரன்