உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

சிவாஜினி சிறிதரன்

சிவாஜினி சிறிதரன்

கவி இலக்கம் 110 மூண்ட தீ யாழ் நூலகம் அனைத்துலக அளவில் அதிகம் பேசப்பட்டதே ஆர்வலர்களின் அயராத உழைப்பின் உன்னதம் ஆவணப் காப்பகமாக மிடுக்குடன் மிளிர்ந்தது புத்தூர் செல்லப்பாவின் எண்ணத்தில் வண்ணமாய் தன் இல்லமதில் சில நூல்களுடன் நடாத்தி வந்த நூல் நிலையம் விரிவுபடுத்தும்நோக்கில் செல்லப்பா அவர்களும் பிரமுகர்கள் இணைந்தே வாடகைக்கு பெற்ற சிறிய அறையொன்றில் நூலகம் இயங்கியதே செல்லப்பாவின் சிந்தனையே அத்திவாரம் கட்டடமாக எழுந்தது நூறு நூல்களுடன் இயங்க தொடங்கிய அறிவாலயம் 1936 ஆண்டினிலே யாழ் நகரசபையில் ஒப்படைத்து இரண்டு தளம் கொண்ட அழகிய கட்டடம் வடிவமைக்கபட்டதே 1959 இல் யாழ் மேயராக கடமையாற்றிய அல்பிரட் துரையப்பா அறிவாலயத்தை திறந்து வைத்தாரே 1981 யூன் 31 இரவு சிங்கள வன்முறை குழுவொன்றால் நூலகத்திற்கு தீ மூட்டப்பட்டது இதுவே இனங்களுக்கு இடையிலான கலவரத்தை மூட்டிய தீயாக மாறியதே முடிவில்லா தீ ஆக மூண்ட தீ ஆக தொடர்கிறதே!! நன்றி வணக்கம் சிவாஜினி சிறிதரன்