உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

சிவரூபன் சர்வேஸ்வரி

சிவரூபன் சர்வேஸ்வரி

பூக்கும் புத்தாண்டு ஃஃஃஃஃஃஃஃஃஃஃ பூக்கும் புத்தாண்டு பொலிவுடன் வருக // காக்கும் நிலையிலே கருணையுடன் மிளிர்க // நோக்கும் போதிலே பிணிகளும் ஒழிக // தேங்கட்டும் செல்வம் செழிப்பாய் நின்றே // பொங்கட்டும் புதுமைகள் பேரொளியும் போன்றே // தஞ்சம் என்றே உன்னையே நம்பவே // கஞ்சமகளாய் சிரித்துமே வருவாய் எழில்பூத்தே // வண்ணமகளே வாடாத ரோஜாவே வாடியம்மா // தேடாத திரவியமே தங்கமகளே தைமகளே // உன்வரவும் என்னாளும் உலகமும் உய்யவே // உயர்வே உகந்ததே உன்னத நீரோட்டமாய் // தரவே வருவாய் நிம்மதியும் காணவே // திறமே உன்னைப் போற்றியும் துதிக்கையில் // மனமே இனிக்கவே மகிழ்வுகளும் தருவாய் // இகபரசுகங்கள் இனிதுடன் கிடைக்கவே தினமும் // பனிவிழும் துளியில் பசுமையும் துளிர்விட // காய்களும் கனிகளும் கனிந்தே சிறந்திடவும் // மலைகுலைந்தாலும் மனமும் குலையாத வண்ணம் // தேன்குழலாய் தித்திப்பாய் தீர்வுடளே நின்று // காலமகளே கலையமுதே காசினியின் மாதாவே // அறத்தோடு அன்பும் மேவியே பாய்ந்திட // மறைநூல் காட்டும் மாதேவி எங்கும் // இருள் போக்கியே ஒளிவீசிட வேண்டும் // அருள் கூடவும் அகமினிக்கவும் அருள்வாயே // பிறைசூடியவா பித்தனே பத்தாவே உன்னடியேநாமே// சிவருபன் சர்வேஸ்வரி