உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

சிவரூபன் சர்வேஸ்வரி

சிவரூபன் சர்வேஸ்வரி

இதயம் ஃஃஃஃஃஃ இதயமே என் இதயமே எங்கே போகின்றாய் // இகமதில் என் எண்ணங்களே எங்கே போகின்றாய் // மனசுக்குள் மத்தாப்பூ விரிந்து பூக்குமே // மெளனமே நீயுமோ என்னைக் கொல்கின்றாய் // சிரிப்பதும் அழுவதும் உன்னெஞ்சும் அல்லவா // ஆற்றிட வேண்டுமே அறிவால் நீயென்றும் // மாற்றியும் வைக்கின்றார் இதயம் பார்புள்ள // மறந்துமே கவலையை தூக்கியெறி புள்ள // நினைப்பதும் மறப்பதும் இதயம் தான்புள்ள // ஈனத்தை மறந்துநீ இயல்பாய் எழும்புவாய் // பூட்டிய கூட்டுக்குள் ஆவி துடிக்குதே // போனால் வந்திடுமா புரிய வேண்டுமே // ஏற்றிய தீபத்திலே ஒளியும் மிளிருமே // காட்டிய பாதையிலே கால்கள் செல்லுமே // கருணையை நினைத்துமே கடமை செல்லுமே // காலம் போற்ற வாழ்வாய்யென்றால் இதயம் வாழுமே // சிவருபன் சர்வேஸ்வரி ✍✍🌸🌸