உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

சிவரூபன் சர்வேஸ்வரி

சிவரூபன் சர்வேஸ்வரி

நேசத்தின் ஆர்ப்பரிப்பில் நெஞ்சம் சிலிர்க்கிறதே ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ கண்ணும் கதைபேசும் காதலின்பம் கூடும் // மின்னும் கதிரொளியே மிளிர்ந்தாய் என்னகம் // வீசும் தென்றலே எனது சுவாசக்காற்றே // வாசமலரே மிகையாக வந்தவளே நீயும் // சிலையாக எனதுள்ளம் சிலநொடியில் கரைந்ததே // உருக்கியும் வார்த்தானோ ஊடுருவிப் பாய்கிறாயே // பெருக்கி விட்டாய் பெருமையும் கிடைத்ததடி // நேசத்தின் ஆர்ப்பரிப்பில் நெஞ்சமும் சிலிர்க்கிறதே // பாசத்தின் நிலையை பாங்காய் பரப்பினாய் // ரீங்காரம் இடும் வண்டாகினேன் பூங்கொடியே // ஆங்காரம் இன்றியே அணைப்பேன் கண்ணே // சங்கீதமாய் சந்தோசமாய் வாழ்வோம் என்றுமே // தங்கக் குடமே தளராத தளிரே // வங்கக் கடலிலே விளைந்த வலம்புரியே // சிங்கப் பெண்ணே செவ்விதழ் தேனே // சீராட்ட வந்தவளே சிவகங்கையும் நீதானோ // சிவருபன் சர்வேஸ்வரி