உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

சிவரஞ்சினி கலைச்செல்வன்

சிவரஞ்சினி கலைச்செல்வன்

சந்தம் சிந்தும் சந்திப்பி161 பெருமை உடையார் பரம்பரை ஊரில் தலை முறை தலைமுறை வழியாய் வந்த எம் வம்சம் வழி இன்றி அலைகுது எங்கும் மெத்தை வீட்டை போரில் ஒற்றை கூரையும் இல்லாமல் செய்தது பொம்பர் குண்டு மெத்த பரந்த காணி வயல் தோட்டம் இன்னும் பற்றை காடாய் ஆமி பிடித்த காணி மீளுது அயல் உறவு பாவி பிடித்த வயல் காணி இன்னும் வழக்கில் செம்பு தண்ணி முதல்கை பரம்பரை அண்டி வாழ்ந்த குடிகளில் கட்டி அழகாய்வாழுது கனடாவில் சாதி சனம் குடிப்பெருமை பரம்பரை பேர் ஊரில் சாதித்ததை காசு பணமே காட்டுது இன்று பெரிசாய் வள்ளம் ஒருநாள் ஓடத்தில் ஏற வள்ளத்தில் ஒருநாள் ஓடம் ஏற பெருமை,சிறுமை எல்லாம் ஒருநாளில் மாறும் நிலமை -சிவரஞ்சினி கலைச்செல்வன்-