உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

சிவதர்சனி இரா

சிவதர்சனி இரா

வியாழன் கவிதை 1922! நோக்கடா மானிடா…! நோக்கம் கொண்ட மனிதா நீ நோக்கிட எத்தனை விதமாய் தேக்கிட எண்ணு தினமும் ஆக்கிடும் அதனுள் பலதே.. வாக்கினைத் தருவாரும் உளரே - வல்லவை ஊக்கிட உதவுவாரும் சிலரே ஏக்கமும் மெல்ல விலக்கு ஏந்திட வேண்டுமே உழைப்பு.. பூத்திடும் நொடிகள் விரைவாய் புனைந்திடு கனவினை உன் நனவென யாவும் மாறும் புவனமும் உன்னைப் போற்றும்.. உனக்கென இருப்பது உனது அதைத் திருடிட யாரால் இயலும்?- ஒரு நாள் உனக்கது மெல்லவே புரியும் மானிடா…! சிவதர்சனி இராகவன் 25/1/2024