உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

சித்திரைப்புத்தாண்டு

சித்திரைப்புத்தாண்டு

இரா.விஜயகௌரி புத்துயிர் விதைத்தொரு புதியதோர் ஆண்டு விளைந்தது பூமியிலே -இங்கு சித்திரை விரித்தெழும் சீரிய பாதையை செம்மையுள் பதித்தெழுவோம் எத்துணை விடியல்கள் எத்தனை படையல்கள் இத்துணை நாள் தொடர்ந்தோம் அத்தனை நிறைவையும்அகம் நிறை மகிழ்வுடன் எழுதிட சித்திரை மகள் பிறந்தாள் நம்பிக்கை விதைத்தெழும் நனி சிறப்பினை எழுதிட புரட்சியுள் மகள் பிறந்தாள் புனித்த்தின்இணைவினில் அமைதியை பரப்பிட அகிலத்தில் இவள் பிறந்தாள் அழகுறு மலர்களின் அறுவடை விரிப்பினில் நளினமாய் இவள் பிறந்தாள் அகத்தினில் அன்பினை நறுமலரென விரித்திட அழகுடன் இவள் மலர்ந்தாள்