உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

சாளரத்தின் ஒளியினிலே

சாளரத்தின் ஒளியினிலே

19.09.24 ஆக்கம் 330 சாளரத்தின் ஒளியினிலே ஓலைக் குடிசையிலே காலை வேளையிலே சிவந்த அடிவானத்திலே குவிந்த ஒளிக்கற்றை சாளரத்தினூடே பதிந்த ஒளிச் சிதறல்கள் நித்திரையின்றிப் புரண்ட கண்ணில் பட்டுத் தெறித்த அன்றைய நினைவுக் கீறல்கள் மனதில் இன்றும் புதைந்த உயிரூட்டங்கள் தாங்கொணாத் துயரம் தாகந்தீராக் கனவுகள் சோகந்தரும் பணப் பற்றாக் குறைகள் சூரிய பகவானின் கருணை பயிரில் பாரிய விளைச்சல் உச்சந் தொட சோர்ந்த முகம் மலரக் கண்ட சாளரத்தின் ஒளியினிலே அந்தப் பசுமையான வாழ்வோட்டங்களே . ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து