உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

சாளரத்தின் ஒளியினிலே..,,,

சாளரத்தின் ஒளியினிலே..,,,

“ சாளரத்தின் ஒளியினிலே........கவி...ரஜனி அன்ரன் (B.A) 19.09.2024 சாளரம் ஒரு சாமரம் சாகசம் காட்டிடும் அதிசயம் கதை சொல்லும் புத்தகம் கலைக்கூடம் சாளரம் கண்களுக்கு நல்விருந்து காட்சிகளின் ஓவியம் சாளரம் ! சாளரத்தைத் திறந்ததும் ஒளி வந்து தொட்டுச் செல்ல தென்றல் காற்றும் தழுவிட தெம்மாங்குப் பாட்டிசையும் கேட்டிட புத்துணர்வாகுமே உள்ளமும் புதிய நம்பிக்கையும் பிறக்குமே ! பரந்து விரிந்து கிடக்கும் பூமியை பரவசமாய் பார்த்து ரசிக்க பசும் சோலைகளைக் கண்டு களித்திட பட்சிகளின் இனிய கீதத்தைக் கேட்டு மகிழ திறந்திடுமே சாளரமும் ஒளியோடு ! சாளரத்தின் ஒளியினிலே மழைத்துளிகள் ஓவியமாக நட்சத்திரக் கூட்டங்கள் கண்ணைச் சிமிட்டிட கண்களும் குளிர சாளரமும் சாமரம் வீசிட வாழ்வின் அழகான பரிசு சாளரமே ! https://www.youtube.com/watch?v=6hwdFNMuYxU