உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

சாரளத்தின் ஒளியினிலே

சாரளத்தின் ஒளியினிலே

கவி 741 சாரளத்தின் ஒளியினிலே மூடியே கிடக்கும் யன்னல்கள் மூடிய இருள் கலைந்தும் விலக்கப்படா திரைகள் மெத்தைக்குள்ளே புதைந்துகொள்ளும் தூக்கவிரும்பிகள் இருட்டைக்கடந்தும் முரட்டு உறக்கம் வெளிச்சத்தில் உருகிடும் பனியா இவர்கள் ஒளியை பார்த்தால் குருடாகும் உயிரினமாக இவர்கள் இல்லை சோம்பலால் சிறைப்படுத்தப்பட்டவர்கள் வெளிச்சத்தின் விரோதிகள் இரவின் நண்பர்கள் மனிதா மூடிய திரையை இழு ஒளி வரட்டும் ஒளியின் வருகைக்கு தடை விதிப்பதா புற ஒளியூடாகவே அக ஒளி மூட்டப்படுகின்றது எப்படி சூரிய வெளிச்சத்தை வாங்கி நிலா மிளிர்கின்றதோ அதைப்போல் சாரளத்தினூடே வருகின்ற சூரிய ஒளியை தரிசித்துப்பார் அன்றைய நாளுள் மகிழ்ச்சி கைகோர்க்கும் உற்சாகம் மனமேடையில் கூத்தாடும் தேகம் வேகம்பெற்று ஐல்லிக்காளையாக துள்ளிக்குதிக்கும் எனவே சாரளத்தை திற ஒளியை நுழையவிடு இப்போ பிராணவாயு சுமந்த காற்று உட்புகும் எட்டி வெளியே சுற்றிப்பார் விழிகள் புன்னகைக்கும் அப்படியே அண்ணாந்துபார் அந்த நீலவானம் மனதை சுண்டியிழுக்கும் நுழைந்தவொளி மனச்சிக்கல்களை சிக்கெடுத்து நிம்மதியை பரிசாகத் தந்துவிட்டே செல்லும் ஜெயம் 19-09-2024