உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

சாதனை ஏட்டில் நாயகன் பதிப்பு

சாதனை ஏட்டில் நாயகன் பதிப்பு

சாதனையின்ஏட்டில் நாயகனின் பதிப்பு பாமுக அதிபரே பன்முக சாதனை நான்முக வாழ்வின் சரித்திர நாயகன் அடுத்த தலைமுறையை அணைத்து வளர்ப்பவர் எடுத்த கருமத்தில் உறுதியோடு இருப்பார் பாமுகப் பந்தல் இலண்டன் தமிழ் சண்ரைஸ் என்ற சரித்திரம் சொல்லும் இவர் சாதனை அறிவிப்பாளராய் அணைத்தெடுக்கும் முத்தாய் வித்தான தமிழுக்கு விளங்கும் விடிவெள்ளி நவீனங்களை நற்றமிழோடு இணையவழி இங்கிதமாய் கொண்டு வந்த சாம்ராட்சியம் எங்கள் அதிபர் கொட்டும் மழையிலும் விட்டுவிடா பொழிவு இவர் தமிழ் வாழ்வியல் சிந்தனையும் வரலாற்று முகமும் வண்ணத்தமிழோடு வளருது கண்டீரோ!! சாதனை விருதை பெற்ற அதிபரை பல்லாண்டு வாழ்த்துவதில் மகிழ்வடைகிறோம் காந்தக்குரலில் கண்ணியமானவரே காலம் உங்களை வாழ்த்தும் வாழ்த்துகிறோம் வாழிய வாழியவே!! விருதின் உயர்வும் விளங்கும் பணியும் ஓங்கட்டும் நகுலா சிவநாதன்1785