உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

சங்கதிகேளு 607

சங்கதிகேளு 607

சங்கதிகேளு வண்டியின் ஓட்டம் வேகமாய் செல்ல சக்கரத்தின் ஆட்டம் வழுக்கியே போக இளையவர்கள் கூட்டம் பாதியிலே கவிழ இழுபறிப் பட்டு நிலத்திலே முடியுது இடிபோல செய்தி அதிகாலை வந்திட இரவு தூக்கம் இல்லாது போக இளவல் நிலை தலைதூக்கி நிற்க இதயமும் பயத்தால் பதட்டமாய் அடிக்க நாயும் குறுக்கே தெரிவிலே பாய சேயும் பிறேக்கை இறுக்கவே பிடிக்க தேய்து இழுத்து மரத்துடன் மோத வாயும் முகமும் குருதியில் நனைய வண்டியும் கீறல் வேகமும் மீறல் தாயும் சீறல் தட்டிக்கேட்டா மோதல் கையிலே கட்டு வேணுமாம் நோட்டு கட்டுப்பாடு இல்லா கரணம் போடுதே