உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

சக்தி சத்திதாசன்

சக்தி சத்திதாசன்

காதல் நெஞ்சுக்குள்ளே எரியும் சுவாலை எந்த நீரினாலும் அடங்காத தாகம் எனக்குள்ளே ... எனக்குள்ளே .... பிறக்கின்ற வேகம் ; ஏதோ சிறகெடுத்து பறக்கின்ற ஞானம்..... பிறந்ததன் பயனறியா இறந்தபின் முடிவறியா ஈரம் !ஈரம் !ஈரம் ! நெஞ்சை அழுத்தி நிற்கும் பாரம் ! மோகச் சுழலுக்குள் மீள வழியின்று சிக்கித் தவித்து நின்ற முட்டாள் பருவமதில் அறியாதிருந்த அனுபவங்கள் ஆயிரமாய்க் கற்றுத் தந்தன... எதைத் தேடினேன் ----பின்னே அதையா நாடினேன்? ஏனோ மூடினேன் நெஞ்சக் கதவைத் திறக்கச் சாவி ! சாவி !சாவி ! இல்லையெனத் தாவிச் சரிந்ததொரு தென்னஞ்சோலையெனும் காதல் சாலையதில் நீளமான பயணத்தில் நின்று விட்ட ஞாபகங்கள் ....... தொலைத்து விட்ட கணங்களை எனக்குள் நானே இன்றும் தேடிக் கொண்டே ..... சக்தி சக்திதாசன்