உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

சக்தி சங்கர்

சக்தி சங்கர்

வணக்கம்! சந்தம் சிந்தும் சந்திப்பு பூக்கும் புத்தாண்டு ********************** அறுசீர் விருத்தம் சீர் வரையறை காய் காய் காய்/ காய் காய் காய் நம்பிக்கை ஊட்டுகின்ற ஆண்டாக நானிலத்தில் எங்கணுமே நன்மைகளும் தும்பிக்கை யான்அருள வேண்டுமன்றோ துன்பங்கள் நீங்கிடவும் துரோகங்கள் நம்மைவிட்டுத் தொலைந்திடவும் நல்லதொரு நாடாக மலரவேண்டும் என்றேதான் கும்மியடித்து வரவேற்போம் புத்தாண்டை குதூகலமாய்க் கொண்டாடி மகிழ்ந்திடுவோம்! சீராக ஆட்சியும்தான் நிலவணுமே சிறுமைகளும் மறைந்திடவே வேண்டுமன்றோ நேராக நடத்திடவே நேர்மையுள்ள நெஞ்சங்கள் பிறக்கட்டும் புத்தாண்டில் ஏராளம் நன்மைகளும் செய்திடுவோம் ஏழைகளின் வாழ்வும்தான் சிறக்கணுமே பாராய ணமும்பாடி வரவேற்போம் பாரினிலே புதுவாழ்வு பூத்திடவே! நன்றி வணக்கம்!