உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

சக்தி சக்திதாசன்

சக்தி சக்திதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு 276 “ஞாபகங்கள் !” அவை இனிமையா ? இல்லை இதயத்தின் சுமைகளா ? சில நேரங்கள் . . . சிற்சில நேரங்கள் அவை கற்கண்டாய் இனித்துக் கொண்டு . . . அதே நெஞ்சில் . . அதே ஞாபகங்கள் வேறொரு சமயத்தில் வேப்பங்காயென கசக்கின்றனவே ! புரியாத புதிர்களாய் காலச் சக்கரத்தின் சுழற்சிக்குள் சிக்கிக் கொண்டே உருண்டிடும் சிதைந்துபோன ஞாபகங்கள் . . . அவை மட்டும் புரிந்திருந்தால் வாழ்வில் எத்தனை இரவுகளில் மூடாத விழியிமைகள் மூடியிருக்கும் ? காலம் அதற்கென்ன அது தனது போக்கிலே ஞாபகங்களை உலக்கிக் கொண்டு பகடைகளாக எம் உருட்டிக் கொண்டு உருண்டு கொண்டே செல்கின்றதே ! உருண்டு கொண்டே நாமும் ஞாபகங்களின் மீதேறி அடுத்தவரைக் காட்டிலும் உயர்ந்தவர் எனும் மாயையில் மூழ்கிக் கொண்டே உருட்டப் படுவதை அறியாமல் ஊமைகளாய் எங்கோ செல்கிறோம் ! ஓ ! அது என்ன . . . சிரிப்புச் சத்தம் பலமாகக் கேட்கிறதே ! ஒரமாய் நின்று ஞாபகங்கள் எமைப் பார்த்து ஓங்காரமாய் ஓலமிட்டு சிரித்துக் கொண்டிருக்கிறது . . . . சக்தி சக்திதாசன்