உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

சக்தி சக்திதாசன்

சக்தி சக்திதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு 254 விருப்பு தலைப்பு எழுதாத கவிதை ஒன்று எதற்காக எழுந்தது இன்று ஏதேதோ ராகம் கொண்டு இசைக்கின்ற கீதம் கண்டு துடிக்கின்ற இதயம் இரண்டு வடிக்கின்ற சோகம் சீண்டும் முடிக்கின்ற வாழ்வில் என்றும் சிரிக்கின்ற காலம் கெஞ்சும் புதிதான ஞானம் இல்லை புரிதலே அவ் வறிவின் எல்லை அழகாக மலரும் முல்லை அதற்காக வண்டின் தொல்லை பேசாத வார்த்தை எல்லாம் எழுத்தாகக வடியும் வெள்ளம் எதற்காக வாடிடும் உள்ளம் அன்பங்கு தேடிடும் பள்ளம் நேற்றோடு மறைந்தது எண்ணம் காற்றாக மறைந்தது உருவம் நீறாகத் தகித்திடும் உணர்வு வேறாகப் பிரிந்திடும் இதயம் சொல்லி வருவது இல்லை சொல்லியும் புருவது இல்லை சொல்லாமல் தெரிவது இல்லை சொற்களில் மறைவதும் இல்லை புரிந்திடும் உள்ளம் ஒன்று புகுந்திடும் அதனுள் எண்ணம் வித்திடும் நினைவுகள் எல்லாம் விலகிடும் கனவுகள் கேளாய்   சக்தி சக்திதாசன்