உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

சக்தி சக்திதாசன்

சக்தி சக்திதாசன்

உருளும் உலகம் உறங்கும் இதயம் உண்மை உதயம் உணர்வுகள் புதையும் நினைவுகள் விரியும் நிதர்சனம் புரியும் நீளமாய்த் தெரியும் நடப்பதை அறியும் காலத்தின் ஓட்டம் கனவினில் ஆட்டம் ஆனந்தத் தோட்டம் அறிவிலர் கூட்டம் விதைப்பது யாரோ வளர்ப்பவர் யாரோ அறுப்பவர் யாரோ அறிந்தவர் யாரோ வாழ்க்கையின் ரகசியம் விளங்கிடின் அதிசயம் இகத்தினில் பலரகம் இறுதியில் ஒரேரகம் இயம்பிடில் சத்தியம் இன்பந்தான் நித்தியம் இதயத்தின் சுத்தமே இகப்பரம சித்தமே பிறப்பினில் ஆன்மா இறப்பிலும் ஆன்மா இடையினில் காண்பது இடையறா மாயையே சக்தி சக்திதாசன்