உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

சக்தி சக்திதாசன்

சக்தி சக்திதாசன்

கட்டாந்தரையை விளைநிலமாக்கி எட்டாதினியிங்கு பசியெமக்கென தொட்டதெல்லாம் பொன்னாக்கி ஈட்டியதவர் ஆற்றல்களென்பேன் வறுமையில் உழன்றவர் வாட்டத்தில் வாழ்ந்தாலும் கல்வியில் சிறந்தவர்களாய் களவெற்றிகண்டோர் ஆற்றல்களே ! முதலாம்உலகு தாமெனவே முழங்கிடுவோர் மத்தியில் மூன்றாம்உலகாய் இருந்து முதன்மையடைந்தது ஆற்றலே ! எத்தனைமுறை வீழ்ந்தோம் என்பதல்ல முக்கியமிங்கு அத்தனைமுறையும் எழுந்தோம் என்பதவர் ஆற்றல்களே ! ஆற்றலெனும் சக்திகொண்டு ஆக்கிடும் நம்பிக்கையோடுப் வாழ்ந்திடுவீர் அன்புச்சோதரரே வெற்றியன்றி வேறில்லையுமக்கு சக்தி சக்திதாசன்