உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

சக்தி சக்திதாசன்

சக்தி சக்திதாசன்

காலையிலே மலர்ந்தவொரு கவிதையெந்தன் நெஞ்சிலே கதிரவன் ஒளியதனில் கதைபேசும் பொழுதிதுவே ! வந்தவழி தெரிந்திருந்தும் போகுமிடம் புரியவில்லை இருப்பதிங்கு கொஞ்சக்காலம் இதயத்திலே சோகமில்லை காட்சிகள் பலவுண்டு சாட்சியாக ஞாபகங்கள் மீட்சிதேடிப் பயணங்கள் நீட்சி வாழும்காலம்தானே நிஜங்கள் நிழலாகுவதும் நிழல்கள் நிஜங்களாவதும் நடப்பதுண்டு சமயங்களில் நினைவிலாடும் நர்த்தனங்கள் ஆனந்தமாய் வாழ்ந்துவிட்டால் அன்பாக இருந்துவிட்டால் அனைவருமே நண்பர்களே ! அனைத்துமே அனுகூலங்களே ! மேகங்கள் மறைப்பதினால் ஆதவன் மடிவதில்லை நேர்வழியெம் பாதையெனில் வாழ்வினில் தோல்வியில்லை சக்தி சக்திதாசன்