உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

சக்தி சக்திதாசன்

சக்தி சக்திதாசன்

அம்மா என்றொரு தெய்வம் அன்பின் அடிப்படைத் தத்துவம் அகரமாய் வாழ்வின் ஆரம்பம் ஆண்டவன் என்பதே தாயுள்ளம் விளக்கின் ஒளியாய் ஒளிர்ந்திடும் விந்தையை அறிந்தவள் அன்னையே வியப்பின் வடிவாய் மலர்ந்தவள் வித்தகப் பெண்ணாய் அன்னையரே ! கண்ணில் ஒருதுளி நீரென்றால் கசியும் உதிரம் அவள்நெஞ்சில் தனக்கென எதையும் எடுக்காமல் தன்னை குழந்தைக்காய் ஈந்திடுவாள் தாய்மை என்பது ஓர்வரமே ! தாயினம் உலகில் தனியினமே ! பெண்ணாய்ப் பிறந்த அனைவருமே பூமியில் தாய்மனம் கொண்டவர்களே ! அன்னையர் தினத்தில் மட்டுமல்ல அனைத்துத் தினமும் தாய்மையினை போற்றிடும் வகையில் வாழ்ந்திடலாம் பெண்களைக் கண்ணாய் மதிப்பதனால் வாழிய ! வாழிய ! தோழியரே ! வாழிய ! வாழிய ! அன்னையரே ! புதியதோர் சமுதாயம் அமைத்திடவே புதுமைகள் புரிந்தே வென்றிடுக சக்தி சக்திதாசன்