உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

சக்தி சக்திதாசன்

சக்தி சக்திதாசன்

அதோ ! அந்த வானத்தின் அந்தத்திலே செந்நிறமாய் , மறைந்து கொண்டே ஆதவன் . . . இதோ இந்த முற்றத்தின்  இதயத்தில் இருளாய்த் தவழ்ந்திடும் இரவு . . . . . ஏதோ எழுந்த கனவுகளில் எழுதாத ஓவியமாய் என்னென்னவோ சித்திரங்கள் . . .  . தீதோ தீண்டிடும் சில நினைவுகள் தீயினைப் போலவே தீய்க்குது நெஞ்சத்தின் உணர்வுகளை . . . சூதோ சூழ்ந்த சொந்தங்கள் சூழ்ச்சியின் விளைநிலமாய் தீட்டிடும் சூட்சுமத் தந்திரங்கள் . . . தூதோ தூய்த்திடும் எண்ணங்கள் தூற்றிடும் சாரல்கள் வழி துலக்கிடும் வாழ்வின் மொழி . . . மீதோ மீண்டிருக்கும் காலத்தில் மீட்டிடும் கானங்கள் எல்லாம் மெளனமாய் இதயத்தினுள் புதைந்திடும் நினைவுகளே நிலையாக… சக்தி சக்திதாசன்