உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

சக்தி சக்திதாசன்

சக்தி சக்திதாசன்

மெல்லிய இரவின் வானுக்கு துல்லிய வெளிச்சம் போட்டது போல் சிந்திய பாலொளி வெள்ளம் தனை தந்திட்ட அழகிய வெண்ணிலவே எத்தனை இரவுகள் நீ கண்டாய் எத்துணை உறவிற்கு சாட்சியானாய் இத்தரை மாந்தரின் கனவுகளில் இன்பமழை பல பொழிந்திட்டாய் சுற்றிடும் இந்த இகம் தனிலே சுதந்திரமாய் நீ வலம் வந்தாய் முற்றிலும் மறைந்திடும் நாளொன்று - நீ முழுதாய் ஒளிர்ந்திடும் நாளொன்று இயற்கையின் சுழற்சியின் விதியினிலே இப்படி நீயும் வளர்ந்து தேய்வாய் இதயத்தில் உந்தன் எண்னம் கொண்டால் இத்தனை இன்பம் பொங்குவது ஏனோ ? எழுந்திடும் வினாக்கள் பலவுண்டு எந்நெஞ்சில் நிலவுன்னை கேட்பதற்கு எப்போது நீயும் தரையிறங்கி வருவாய் என்னுடன் பேசி விடை பகர