உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

சக்தி சக்திதாசன்

சக்தி சக்திதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு 286 காற்று அது காதோரம் எனக்கொரு கதை பேசியதோ ? நேற்று நினைவாகத் தவழ்ந்து இன்று கனவாக மிதந்த கதை சொல்லிப் போயிற்றோ ? வேற்று உணர்வோடு கலந்து மீட்டி செவியோடு இணைந்து கடந்து போனதொரு கணமோ ? போற்றி பூத்ததந்த உறவதுவும் பூட்டிய மனக்கதவை யுடைத்து பறந்த கதை பரவியதோ ? சேற்று நிலமதில் விளைந்த செந்தாமரையின் வனப்பை ரசிக்க மறந்த அதன் விளைவோ ? மாற்று மனதின் இயல்பை என காட்டி இயற்கையது புகட்டியதைத் தெரிந்து கொள்ளும் கணமோ ? சக்தி சக்திதாசன்