உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

குமுதினி படுகொலை

குமுதினி படுகொலை

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 15-05-2025 நமது தேசத்தின் இருண்ட நாளது நாப்பது வருடம் ஓடி மறைந்தாலும் நெஞ்சிலிருந்து அகலாத வலியிது குமுதினி குருதியில் குழைந்த நாளது! மாவிலியின் நெடுந்தீவு துறைமுகத்தில் உதிரத்தை உறைய வைத்த செய்தி பசுந்தீவின் வாசிகளையும் பச்சை மழலைகளையும் பரிதாபக் கதறலுடன் குத்திப்படுகொலை குமுதினி படுகொலை குதிரைகளும் பசுக்களும் குமுறி மார்பிலடித்து கூக்குரலிட கடலலை சிவந்து கண்ணீரில் நனைய. பனைமரமும் தென்னைமரமும் பரதவித்து கடலைப் பார்த்தழுத நாளிது. பாவிகளாய் என்னூர் மக்கள் பரிதவித்த அழுகுரல் எத்திசையும் இந்நாளிலே…15.05.1985.