உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

கீத்தா பரமானந்தன்

கீத்தா பரமானந்தன்

உழைப்பாளி நித்திய வறுமைக்குள் சுற்றிடும் பம்பரமாய்/ நெற்றி வியர்வையை முத்தாக மாற்றி/ சுற்றம் நிமிர்ந்திட சத்தமின்றித் தேய்ந்து/ உக்கி உரமாகி உழன்றிடும் சேவகன்/ தேசத்தை நிமிர்த்தும் பெயரறியாத் தூணாய்/ நேசமாய்த் தொடரும் வேசமற்ற கடிகாரம்/ ஒட்டிய வயிறே நித்திய சொந்தமாய்/ செக்குமாட்டு உழைப்பில் தேயும் உருவாகி/ சோர்வறியா உடலோடு சுகமறியா வாழ்வின்/ வேதனைக் கணங்களின் நித்திய போராளியாய்/ வென்றிடும் முனைப்பில் நின்றிடுவான் நிமிர்வாய்/ விடியலைக் காணா ஒளியாய் உழைப்பாளி // கீத்தா பரமானந்தன் 10-05-22