உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

காலத்தை உணர்ந்திடு

காலத்தை உணர்ந்திடு

காலத்தை உணர்ந்திடு கருத்தோடு மொழியைப் பகிர்ந்திடும் வேளையில்// நல்லவளத்தோடு வாழ்வின் நயங்களும் புரியும் // நல்நிலையோடு மனிதன் வளமேகிடல் என்றும் // வரமுறையாய்க் கொண்டு வருவதும் சான்று // தரமோடு செயலும் சிறக்கவில்லை என்றால் // சீரழிவோடு பயணம் நடைப்பிணம் ஆகும் // நற்குணத்தோடு இணங்கிடும் நன்னெறியும் கண்டே // தற்பெருமை கொள்ளாத அகமும் பேணுதல்முறையே // கற்பகதருவின் கருணையினாலே எத்தனை சேவைகள் // அத்தனையும் புரிந்திடும் போதினிலே கேளாய் // அருள்கொடையும் உன்னுடன் சேருமே பண்பாகவே // தர்மமே தன்மானமே தளராத நோக்கமே // கர்வமே கொள்ளாதே காலத்தை உணர்ந்திடு // சிவருபன் சர்வேஸ்வரி