உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

கார்த்திகையாள்....

கார்த்திகையாள்....

“ கார்த்திகையாள் “...கவி....ரஜனி அன்ரன் (B.A) 07.11.2024 காலநகர்வில் கங்குல் பொழுதில் கார்த்திகையாளின் மலர்வு கண்களுக்கு குளிர்வு வானில் நிலா மின்னி ஒளிர வான்மேகம் பூமழை தூவ வண்ண நிலவாக ஒளிவீச வந்து விட்டாள் கார்த்திகையாள் ! திருக்கார்த்திகைத் தீபத் திருநாளும் சோமவாரத் திங்களும் அலங்காரமாக சக்தியும் பக்தியும் இணைந்திட தீபமேற்றிக் கோலம் போட்டு அகல் விளக்குகள் ஜோதியாகி ஆரவாரமாய் அகிலமே ஒளிவீச ஆனந்தமாய் வந்துவிட்டாள் கார்த்திகையாளும் ! கார்த்திகையாளின் வரவு காந்தளுக்கு மகிழ்வு மாந்தருக்கோ மனநெகிழ்வு காந்தள்களும் கலகலவெனப் பூத்துக் குலுங்கிட மாந்தர்களும் மறவர்களை நினைத்துக் கலங்கிட வந்துவிட்டாள் கார்காலக் கார்த்திகையாள் கண்மணிகளை ஒளியேற்றித் துதித்திடவே ! https://www.youtube.com/watch?v=VxGNYDVFqPQ