உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

கவிதை நேரம்-16.05.2024 கவி இலக்கம்-1874 வைகாசி பதினெட்டு --

கவிதை நேரம்-16.05.2024 கவி இலக்கம்-1874 வைகாசி பதினெட்டு --

கவிதை நேரம்-16.05.2024 கவி இலக்கம்-1874 வைகாசி பதினெட்டு -------------------- 2009 வைகாசி பதினெட்டாம் நாள் அழியாத அழிக்க முடியாத நாள் வையகமே இருட்டடித்து இருளாகி இதயத்தை கசக்கி பிழிந்த இருண்ட ஓர் கொடிய நாள் வருடங்கள் பல கடந்து சென்றாலும் வருத்தது எம் மக்களின் பிரிவு நாள் உறவுகளை பிரிந்து போனவர்கள் அல்ல பிரித்து வைத்த மிக கொடியவள் மணம் முடித்த தன் மனைவியிடம் பிரியாமல் பிரிவோம் என மடிந்தவர்கள் மனைவி பிள்ளைகளை அனாதையாக்கி தத்தளிக்க வைத்த கொடூரம் நிறைந்த நாள் சுதந்திரக் காற்றை சுகமாக சுவாசித்தவர்கள் நச்சுக் காற்றை முகர்ந்து மடிந்தவர்கள் விடை பெற்று சென்ற நியதியில் உள்ளாகி விதி வரைந்த நாள் வைகாசி பதினெட்டு