உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

கற்றலின் படியே காசினி உயர்வே

கற்றலின் படியே காசினி உயர்வே

ராணி சம்பந்தர் வையத்தில் வாழ்விற்கு கல்வியே உயர்வு தருமே பையப் பையவே போகும் பாதையில் நெருங்கிடும் தடைக்கற்கள் உடைத்திட அது பல்கிப் பெருகுமே அயர்வு, சோர்வு இன்றி கண்டதெல்லாம் கற்றிட பல படி ஏறிடத் தோல்வி அகன்று வெற்றி தேடி நாடி வருமே கருவறையில் சிசுவுடனே தாய் பேசும் சொல் மொழி கேட்டு ஞான அறிவு கூட உயிர் உடலோடு சேரவே வளர வளர ஒளி பரப்புமே படிக்கப் படிக்க படிப்பறிவு சுற்றும் சமூகம் ,பற்றும் குழந்தைகள் அதனைக் கற்று விருதுகள் பெற்று உதவ உற்றார் உறவினர் மனம் நிறைய வாழ்த்திட கற்றலின் படியே காசினி உயர்வே .