உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

கமலா ஜெயபாலன்

கமலா ஜெயபாலன்

காதல் இதமான காதல் எதவும் அறியாது பதமாக அன்பையும் பகரும் பண்பாய் விதம்விதமாய் வேடிக்கை காட்டும் மதமும் கொண்டு மானிடம் வாட்டும் அன்னையின் மடியில் அரும்பிய காதல் கன்னியின் அழகில் கலங்கிய காதல் புன்னகை பூக்கும் புதுப்புதுக் காதல் என்னையும் மயக்கும் மண்ணின் காதல் மழலையின் மொழியில் மந்திரக் காதல் அழகிய தழிழில் அரும்பிடும் காதல் தழர்விலும் காதலியை தாங்கிடும் காதல் குழவியின் அமுதில் குதுகலக் காதல் அன்பின் ஊற்று இன்பக் காதல் அன்றில் பறவை அதற்குச் சான்று மன்றில் மனிதன் மகிழ்வுடன் வாழ என்றும் வேண்டும் இனிய காதல் கமலா ஜெயபாலன்