உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

கனவு

கனவு

ஆக்கம் 310 கனவு மனதிலே ஆழமான குழப்பம் ஆனதிலே உளமாறிய பிதற்றல் சனமதிலே அங்கும் இங்கும் ஓட இனத்தில் முதல் தெரிவு நானே கன்னக்குழி நடிகை எனப் பெயர் பெறவே பென்னம் பெரிய மகிழ்வு பொங்கிட சின்னக் கதை ஒன்று கன்னக்குழி அன்னக்கிளியே வாசியும் -ஒன்று, இரண்டு, மூன்று கட், கட் சொல்லாது விழுங்கிடவே விக்கித் தவித்து ஏதேதோ சொல்ல டைரக்டர் சொன்னது மட்டும் ஞாபகமே குட்டும், குட்டும் இறுக்கிக் குட்டும் கை நொந்த போதுதான் தெரிந்தது இறுக்கிக் குட்டியது கட்டில் விளிம்பிலே என் தலையில் அல்லவே கண்டதும் கனவே . ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து