உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

கனவுப்பயணம்..!!

கனவுப்பயணம்..!!

வியாழன் கவி-2334 கனவுப்பயணம்!! தினமும் விழிமூடி வியப்பில் ஆழ்த்தும் உறக்கம் தீராத வேட்கையோடு கடக்கும் அழகான கனவுப்பயணம்.. துயரங்கள் இல்லாத தூக்கத்தின் பரிசாய் மெல்ல வான் கடந்து விண்வெளி கடந்து மோன நிலைப் பயணம்.. விழிகள் மூடி தடைகள் தகர்த்த சரித்திரப்பயணம் காசு இன்றி பயணச்சீட்டு இன்றி இலவசப் பயணம் இது வசந்தப்பயணம்.. உடலுக்கும் உளத்துக்கும் சோர்வு தராது உற்சாக தருணம் உயர்வாகும் எரிபொருள் விலையால் எளிமையாகுதே கனவுப்பயணம்!! சிவதர்சனி இரா 7/5/2026