உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

" கதிரும் தமிழும் "

" கதிரும் தமிழும் "

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை உச்சியிலே தமிழின்பிறப்பு இருளைப் போக்கி ஒளியைத் தருவதுகதிர் அறியாமை இருளகற்றி அறிவிற்கு ஒளிதருவதுதமிழ் ! காலம் பிறக்கும்முன் உதித்தான் கதிரவன் கல்தோன்றாக் காலத்தின் ஒளிப்பிளம்பு தமிழ் கதிர்உலகிற்கு தருவது செந்நெல்வளம் தமிழ் உலகிற்கு தருவது நன்னெறிவளம் மண்ணில் உயிர்கள்வாழ கைகொடுப்பான் கதிர் மனிதம்வாழ அறிவெனும் ஒளிதருவாள் தமிழ் ! கதிரவன் இல்லையெனில் புவியில் உயிர்களில்லை தமிழ்இல்லையெனில் தமிழர்க்கு முகவரியில்லை விண்ணில் வாழும்வரை கதிரவன்ஒளிரட்டும் மண்ணில்மனிதன் வாழும்வரை தமிழும்வளரட்டும் கதிரவன்வெப்பம் இப்போஉச்சம் தமிழின்சுவையோ எப்போதும்உச்சம் ! https://www.youtube.com/watch?v=FecFTiJM8Dg