கணப்பொழுதில்...
கணப்பொழுதில்...
ரஜனி அன்ரன் (B.A) கணப்பொழுதில்...... 19.06.2025
சுதந்திரவானில் பறந்த உலோகப்பறவை
சுக்குநூறாகியதே கணப்பொழுதில்
தொடங்கும் போதே முற்றுப்புள்ளி
முடங்கியதே கனவுலகம் கண்முன்னே
இதயத்தைப் பிழிகிறது சோகம்
உலகே நடுக்கத்தில் மீளவில்லை இன்னும் !
ஒவ்வொரு உயிர்களுக்கும் பின்னால்
இதயத்தைப் பிழியும் துயரக்கதைகள்
கற்பனைகளைச் சுமந்தபடி கனவுகளில் மிதந்தபடி
கட்டியணைத்து உறவுகளுக்கு விடைகொடுத்தபடி
எதிர்காலம் நோக்கி தொடர்ந்தபயணம்
புதிராக நொடிப்பொழுதில் வெடித்துச் சிதறியதே !
கணப்பொழுதில் கண்ணிமைக்கும் நொடியில்
அரங்கேறிய அவலங்கள் ஆறவில்லை இன்னும்
பயணிகளின் பயணங்கள் கனவாகிப்போக
கருகிப் போனது உடலங்கள்
அடையாளம் காணமுடியாத சோகம்
ஆறாத்துயரத்தில் உறவுகளும்
அத்தனையும் கணப்பொழுதில்........
https://www.youtube.com/watch?v=NxLqCTDlR2M
