உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

கணப்பொழுதில்……..

கணப்பொழுதில்……..

இரா.விஜயகௌரி கணப்பொழுதில் விரைந்தெழுந்து கரைந்தெழுதும். வாழ்வு- இங்கு வினைப்பயனோ வினைத்திறனோ அறிவறியாப் பொழுது் கனத்தெழுதும் வாழ்வின் நொடி கனவெனவே கலையும் -இங்கு நிலையில்லா. இவ்வாழ்வினுக்கா-எம் குழி பறிக்கும் கூட்டம் ஆய்ந்தறிய முடியாத ஆய்வரங்கு அழுதேதான் புரண்டாலும் மீளாத உயிர் வதையின் ரணங்கள் புரியாமல் ஓடுகின்றோம் புதைகின்றோம் அழித்தெழுதி அனலெழுதி சிதைத்தழித்து சீர்குலைத்து மனம் வதைத்து. குணம் சிதைத்து ஏன் ஏனின்னுமெங்கள் வாழ்வு புரியாத மானுடனே இங்கு நிலையில்லை. வாழ்வு தினம் மனங்களிலே. வாழ்வு சமை நிலை கொள்ள. வாழ்வாய்