உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

கடந்த ஆண்டே

கடந்த ஆண்டே

கவி 754 கடந்த ஆண்டே இரண்டாயிரத்து இருபத்துநாலே உன்னிடம் அனுபவப்பட்டதைச் சொல்லவா அன்றி அனுபவித்துப் பெற்றதை சொல்லவா புத்தம்புதிதாக நீ பிறக்கும்போது வரவேற்று கைகுலுக்கினேன் இனிய தருணங்களை எனக்கென்றே உற்பத்திசெய்தாய் மகிழ்ச்சியை நிகழ்ச்சியாக்கி புன்னகைக்கும் பாக்கியத்தை கொடுத்தாய் சொந்தத்தை தேடினேன் நீயென்றாய் சொர்க்கத்தைத் தேடினேன் அதுவும் நீயானாய் வாழ்வெனும் பயணத்தில் பயனடைந்த வழிப்போக்கனானேன் நன்மைகளும் நலமும் நீ தந்ததாகவே கருதுகின்றேன் இதந்தரும் வலிகளற்ற பூக்களாலான வழி அது உன்னருள் என்பேன் கரம் தந்தார்கள் பலர் அதுவும் உன் வரம் என்பேன் எதற்காக அவசரப்பட்டு விடைபெற்றாய் ஏன்தானோ பூமிவிட்டு ஓடிமறைந்தாய் நித்தமும் பிணைந்திருந்து நண்பனாய் இருந்துவிட்டு நட்டநடு நிசியில் சட்டென விலகிவிட்டாய் என்செய்வேன் ஏதுசெய்வேன் இன்னொருமுறை நாம் சந்திக்க வாய்ப்பும் உண்டோ கண்கலங்கவைத்துவிட்டு கடந்து நீயும் சென்றுவிட்டாய் பூமியதை பூவனமாய் மாற்றித்தந்து எங்கு சென்றாய் நன்றியுடன் வாழ்த்ததையும் பங்களிப்பு செய்கின்றேன் பெருமைமிகு ஆண்டு நீ பெருமை சேர்த்த ஆண்டு நீ இருந்தாலும் இருபத்தைந்தையும் மலர்தூவி வரவேற்கின்றேன் புதுசும் பழசுபோல் வசமாகினால் வருசத்தை ஆராதிப்பேன் ஜெயம் 02-01-2025